21 ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இதுவரையில் இலங்கை வௌ்ளிப்பதக்கம் ஒன்றையும் 3 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளது.
மற்றுமொரு வெண்கலப்பதக்கத்தை வெற்றிகொள்வதற்கான சந்தர்ப்பம் சற்று நேரத்திற்கு முன்னர் கிட்டியது.
ஆடவருக்கான 52 கிலோகிராம் எடைப்பிரிவிற்கான குத்துச்சண்டை கோதாவில் இலங்கையின் இஷான் பண்டார மற்றும் லசத்தோ இராஜ்ஜியத்தின் தபோ மொலோபோ போட்டியிட்டனர்.
கடுமையான போட்டியின் பின்னர் இஷான் பண்டார வெற்றியீட்டினார்
இதற்கிணங்க அரையிறுதியில் தோல்வியடைந்தாலும் அவரால் இலங்கைக்கு வெண்கலப்பதக்கம் ஒன்றை ஈட்டிக்கொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.