728x90 AdSpace


  • Latest News

    10ல் ஒரு குழந்தைக்கு நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள்.. அதிர்ச்சி தகவல்!



    இந்தியாவில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தேசிய ஊட்டச்சத்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 10ல் ஒரு குழந்தைக்கு நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

    5 முதல் 9 வயதுக்கு உட்பட்டவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 1 சதவீதம் குழந்தைகள் ஏற்கெனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிக கொழுப்பு உள்ள உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கும் போது இதயம் சம்பந்தமான நோய்கள் வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    சுமார் 1,12,000 குழந்தைகளை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: 10ல் ஒரு குழந்தைக்கு நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள்.. அதிர்ச்சி தகவல்! Rating: 5 Reviewed By: STAR Networks Sri Lanka
    Scroll to Top