728x90 AdSpace


  • Latest News

    இறப்பிலும் இணை பிரியாத தம்பதி.. 104 வயது கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் மரணம்!




    புதுக்கோட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு தனது 104 வயது கணவர் இறந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அவரது 100 வயது மனைவியும் உயிரிழந்தார்.

    104 வயதான வெற்றிவேலுக்கும், 100 வயதான பிச்சாய்க்கும் திருமணமாகி 75 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதியருக்கு 23 பேரக்குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில், வெற்றிவேலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஆலங்குடி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, கணவர் வெற்றிவேல் உடலை பார்த்து கதறி அழுது கொண்டேயிருந்த மனைவி திடீரென மயக்கம் அடைந்துள்ளார். அவரை எழுப்பியபோது, அவரும் உயிரிழந்து விட்டது தெரியவந்தது. கணவர் இறந்த ஒரு மணி நேரத்தில் துக்கம் தாங்க முடியாமல் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: இறப்பிலும் இணை பிரியாத தம்பதி.. 104 வயது கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் மரணம்! Rating: 5 Reviewed By: STAR Networks Sri Lanka
    Scroll to Top