728x90 AdSpace


  • Latest News

    வந்தவாசியில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு...!!!

    நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளை உங்களுக்கு தொகுத்து வழங்குகின்றோம்.
    கோப்புப்படம்
    Image captionகோப்புப்படம்

    தினமணி - வந்தவாசியில் 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தேசூரில் 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நடுகற்கள் கண்டறியப்பட்டதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
    வந்தவாசியை அடுத்த தேசூரில் கோட்டைப் பகுதி இருப்பதாகவும், அதுகுறித்த தகவல்களைச் சேகரிக்குமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.ஜானகி கூறியதன் பேரிலும், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச.பாலமுருகன், முனைவர் சுதாகர் ஆகியோர் அண்மையில் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.
    அப்போது, அந்தப் பகுதியில் பாழடைந்த நிலையில் மசூதி போன்ற ஒரு கட்டடமும், அதனருகில் 5 நடுகற்களும் இருப்பது கண்டறியப்பட்டன.
    கண்டறியப்பட்ட 5 நடுகற்களில் 2 நடுகற்களில் மட்டும் 4 அல்லது 5-ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் 2 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு நடுகல்லில் சீயமங்கலத்தில் எறிந்து பட்ட கொற்றம்பாக்கிழார் என்றும், மற்றொரு நடுகல்லில் சீயமங்கலத்தில் எறிந்து பட்ட கொற்றம்பாக்கிழார் மகன் சீலன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன என்று ச.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.
    வீரனின் கையில் கத்தியும் கேடயமும் வைத்திருப்பது போன்ற அமைப்பில் சுமார் 4 அடி உயரத்தில் இந்த நடுகற்கள் உள்ளன. இதனருகில் காலத்தால் பிற்பட்ட மற்ற 3 நடுகற்களும் உள்ளன.
    சீயமங்கலத்தில் பாணரைசர் ஆண்ட காலத்தில் கொற்றம்பாக்கிழார் அந்த ஊரை எறிந்திருக்க (தாக்கியிருக்க) வேண்டும். இவர்களுக்கிடையே மாடுபிடி மோதலோ அல்லது ஊர்களுக்கிடையேயான மோதலோ ஏற்பட்டிருக்கலாம். அவ்வாறு ஏற்பட்ட மோதலில் மேற்குறிப்பட்ட கொற்றம்பாக்கிழாரும், அவருடை மகன் சீலனும் இறந்துவிட, அவர்களது நினைவாக இந்த நடுகற்களை வைத்துள்ளனர்.
    ஏற்கெனவே இந்தப் பகுதியில் சீயமங்கலத்து பாணரைசர் என்ற வாசகத்துடன் ஒரு நடுகல்லை தாமரைக்கண்ணன் என்பவர் கண்டுபிடித்திருந்தார்.
    தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த நடுகற்களிலும் சீயமங்கலம் என வருவதால், இந்தப் பகுதி, பாணரைசர்கள் ஆண்ட பாணாடாக இருக்க வேண்டும். இது வடமொழியில் பாணராட்டிரம் என்று அழைக்கப்பட்டது. இந்த நாடு கடலூர் வரை பரவியிருந்தது என்று கருதலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச.பாலமுருகன் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
    Presentational grey line

    தி ஹிந்து - பாகிஸ்தான் அருட்காட்சியகத்தில் அபிநந்தனின் உருவ பெம்மை

    அபிநந்தன்
    இந்திய விமானப்படையின் விங் கமேண்டர் அபிநந்தன் வர்தமானை போன்ற உருவ பொம்மையை பாகிஸ்தான் காட்சிப்படுத்தியுள்ளதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
    பாகிஸ்தானின் விமானங்களை துரத்தியபோது அந்நாட்டு எல்லையில் விழுந்து, மூன்று நாட்கள் பாகிஸ்தானின் பிடியில் இருந்த அபிநந்தன், கராச்சி அருட்காட்சியத்தில் காட்சிப் பெம்மையாக வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
    பாகிஸ்தானின் விமானப் படையின் தலைமை தளபதி முஜாஹிட் அன்வர் கான் இந்த வாரம் அந்நாட்டு விமானப்படை அருங்காட்சியகத்தில் திறந்து வைத்த புதிய பிரிவில் அபிநந்தனை போன்ற இந்த உருவ பொம்மை வைக்கப்பட்டுள்ளதாக எக்பிரஸ் டிரைபூன் தகவல் வெளியிட்டுள்ளதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: வந்தவாசியில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு...!!! Rating: 5 Reviewed By: STAR Networks Sri Lanka
    Scroll to Top