728x90 AdSpace


  • Latest News

    அக்கரபத்தனையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி...!


    அக்கரபத்தனை பிரதேச சபைக்குட்பட்ட டயகம தோட்ட 2 பிரிவில் இன்று மதியம் 1 மணியளவில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 20 பெண் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகி டயகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

    இவர்கள் பணிபுரிந்த தேயிலை மலையின் தேயிலை செடியின் கீழ்புறத்தில் கட்டப்பட்டிருந்த குளவி கூடு கலைந்ததால் குறித்த 20 பெண் தொழிலாளர்களும் குளவி கொட்டுக்கு இலக்கானதாக  அக்கரபத்தனை பொலிஸார் தெரிவித்தனர். 
    இவர்கள் அனைவரும் டயகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: அக்கரபத்தனையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top