728x90 AdSpace


  • Latest News

    பாகுபலி 3வது பாகம் வந்தால்.... நடிகர்கள் ராணா, பிரபாஸ் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி...!


    இந்தியாவில் சூப்பர் ஹிட்டான 'பாகுபலி' திரைப்படம், கடந்த மாதம், லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் அரங்கத்தில் திரையிடப்பட்டது.
    148 ஆண்டுகள் பழமையான இந்த அரங்கத்தில் இந்தியப்படம் ஒன்று திரையிடப்பட்டது இதுவே முதல் முறை.
    ஒவ்வோர் ஆண்டும் உலகளவில் ஒரு படம் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த அரங்கத்தில் திரையிடப்படும். அந்த வரிசையில், கடந்த மாதம், பாகுபலியின் முதல் பாகம் அங்கு திரையிடப்பட்டது.
    அந்த நிகழ்வில், படத்தின் இயக்குநர் ராஜமௌலி, நடிகர்கள் பிரபாஸ், ராணா டக்குபட்டி, நடிகை அனுஷ்கா ஷெட்டி, படத்தின் இசையமைப்பாளர் கீரவானி ஆகியோர் பங்குபெற்றனர்.
    அதனை தொடர்ந்து நடிகர்கள் பிரபாஸ் மற்றும் ராணா ஆகியோரிடம் பிபிசி ஆசியா நெட்வர்க் செய்தியாளர் ஹாரூன் ரஷீத் எடுத்த பேட்டியின் தொகுப்பு இது.
    பிரிட்டனில் உள்ள பழமையான ராயல் ஆல்பர்ட் அரங்கத்தில் பாகுபலி திரையிடப்பட்டுள்ளது. அதில் திரையிடப்பட்ட முதல் இந்தியப்படம் இதுதான் எப்படி உணர்கிறீர்கள்?
    ராணா: மிகவும் பெருமையாக இருக்கிறது. பாகுபலி இரண்டாம் பாகம் வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் பாகுபலி திரையிடலுக்கு சென்று வருகிறோம். மகிழ்ச்சியாக உள்ளது.
    ராயல் ஆல்பர்ட் ஹால் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நேரில் பாகுபலி படத்தை லைவ் இசையோடு பார்க்கும்போது இருந்த உணர்வு நன்றாக இருக்கிறது.
    புகழ்பெற்ற ராபர்ட் ஹால் அரங்கத்தில் பாகுபலி 1படத்தின் காப்புரிமைBAAHUBALI / TWITTER
    Image captionபுகழ்பெற்ற ராபர்ட் ஹால் அரங்கத்தில் பாகுபலி 1
    நீங்கள்தான் பாகுபலியாக நடித்திருந்தீர்கள். படத்தின் முக்கிய கதாப்பாத்திரம். இவ்வளவு பெரிய வெற்றி எப்படி இருக்கிறது? இதெல்லாம் நடக்கிறது என்பதை நம்ப முடிகிறதா?
    பிரபாஸ்: பாகுபலி 1 படத்தின் வெற்றியை உணர சிறிது நாட்கள் ஆனது. பிறகு பாகுபலி 2. அதன் வெற்றி பிரம்மாண்டமாக இருந்தது. தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது இதற்காக லண்டனுக்கு வந்துள்ளோம்.
    Presentational grey line
    Presentational grey line
    ராயல் ஆல்பர்ட் ஹாலில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு படம் தேர்ந்தெடுக்கப்பட்டு, லைவ் மியூசிக்குடன் திரையிடப்படும். இங்கு இந்தியப்படம் ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். பாலிவும் படமே தேர்ந்தெடுக்கப்படும் என்று எண்ணினார்கள். ஆனால், பாலிவுட் அல்லாத தெலுங்கு மொழிப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இது உங்களுக்கு மட்டுமல்லாது, தெலுங்கு திரைத்துறைக்கு ஒரு பெரிய வெற்றி என்று நினைக்கிறீர்களா?
    ராணா: ஆம். தெலுங்கு திரைத்துறைக்கு பெருமைதான். ஆனால், பாகுபலி திரைப்படம் இந்தியாவின் திரைத்துறையையே மாற்றியிருக்கிறது என்று கூறலாம். தற்போது இதுபோன்று பல படங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. இதெற்கெல்லாம் ஆரம்பமாக இருந்தது பாகுபலி என்று கூறலாம்.
    பாலிவுட் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று நினைக்கிறீர்களா? நீங்கள் எல்லாம் விருது பெரும் மாதிரியான திரைப்படங்களை பல ஆண்டுகளாக செய்து வருகிறீர்கள்..
    பிரபாஸ்: அப்படியில்லை. பாகுபலி திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என்று அனைத்து மொழிகளிலும் வெற்றி பெறும் படமாக அமைந்தது. இயக்குநர் ராஜமௌலி செய்த மாயம் அது. பாலிவுட்டாக இருந்தாலும், தென் இந்தியப்படங்களாக இருந்தாலும், அனைத்தும் இந்தியப் படங்கள்தானே.
    பிரபாஸ் மற்றும் ராணாவை பேட்டி காணும் பிபிசி ஆசியா நெட்வர்க் செய்தியாளர் ஹாரூன் ரஷீத்படத்தின் காப்புரிமை
    Image captionபிரபாஸ் மற்றும் ராணாவை பேட்டி காணும் பிபிசி ஆசியா நெட்வர்க் செய்தியாளர் ஹாரூன் ரஷீத்
    1990களில், பாம்பே போன்ற பல தமிழ் படங்கள் இந்தியில் வெளியாகி மிகுந்த வெற்றியை அடைந்தது. ஆனால், தெலுங்கு படங்கள் இந்தியில் அவ்வளவாக எடுக்கப்பட்டு வெற்றி பெறவில்லை. எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், பாகுபலி அதையெல்லாம் முறியடித்தது ஆச்சரியமாக இருந்ததா?
    பிரபாஸ்: 30 ஆண்டுகளுக்கு முன்பு, ராம் கோபால் வர்மா இயக்கிய 'சிவா' என்ற படம் இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. நாங்கள் பாகுபலி திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், வட இந்தியாவில் இவ்வளவு பெரிய வெற்றியை தரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
    நீங்கள் இந்த படத்திற்காக நான்கரை ஆண்டுகள் செலவு செய்திருக்கிறீர்கள். ஒருவர் கல்லூரியில் படித்து பட்டம் பெருவதற்கான கால அளவு அது. அதையும் தாண்டி இந்தப்படத்தில் நீங்கள் வேலை பார்த்திருக்கிறீர்கள்.
    ராணா: ஆம். இதுதான் எங்கள் பட்டப் படிப்பு. நான் இந்த படத்தில் நடிக்க தொடங்கியபோது எனக்கு 30 வயதாகவில்லை. ஆனால், நான் தற்போது 30களில் இருக்கிறேன். இங்குதான் நாங்கள் வளர்ந்திருக்கிறோம். நிறைய மாறியிருக்கிறது. நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம். அந்த நினைவுகளை எல்லாம் மறக்க முடியாது.
    நடிகர்கள் ராணா, பிரபாஸ் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி
    ராயல் ஆல்பர்ட் ஹால் முன்பு நான் பார்த்தபோது அத்தனை ரசிகர்கள் உங்களை காணக் காத்திருந்தனர். உங்களுக்கு அவ்வளவு புகழ் கிடைத்திருக்கிறது. இந்த புகழோடு நமக்கு பொறுப்பு அதிகமாகி இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? ஏனெனில், தெலுங்கு திரையுலகில் நட்சத்திரங்களாக இருப்பது எவ்வளவு கடினம் என்று தெரியும்.
    பிரபாஸ்: அடுத்து வரும் திரைப்படங்களை தேர்ந்தெடுப்பது முக்கியமாக இருக்கிறது. இனி என்ன படம் வேண்டுமானாலும் செய்யலாம் என்று இல்லாமல், பொறுப்புடன் படங்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
    'பாகுபலி 3' படத்தை ராஜமௌலி எடுத்தால் அதில் நீங்கள் நடிக்க ஒப்புக் கொள்வீர்களா?
    ராணா: நிச்சயமாக. பாகுபலி சம்மந்தப்பட்டது எதுவாக இருந்தாலும், அதில் நாங்கள் இருப்போம். படப்பிடிப்பாக இருந்தாலும் சரி. அதைப் பார்ப்பதாக இருந்தாலும் சரி.
    பிரபாஸ்: மூன்றாம் பாகம் இருந்தால், அதில் நடிப்பது மிகவும் மகிழச்சியாக இருக்கும்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: பாகுபலி 3வது பாகம் வந்தால்.... நடிகர்கள் ராணா, பிரபாஸ் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி...! Rating: 5 Reviewed By: Star Fm Lanka
    Scroll to Top