728x90 AdSpace


  • Latest News

    4 மாதங்களில், 9 நாடுகளுக்கு பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோதி....!


    முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

    தினத்தந்தி: "4 மாதத்தில் 9 நாடுகளுக்கு பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோதி"

    கடந்த 4 மாதங்களில் 9 நாடுகளுக்கு பிரதமர் மோதி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
    நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் , குடியரசுத் துணை தலைவர், பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்த கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் எழுத்துபூர்வமாக விரிவாக பதில் அளித்துள்ளார்.
    "பிரதமர் மோதி கடந்த ஆகஸ்டு முதல் நவம்பர் மாதம் வரை 7 வெளிநாட்டு பயணம் மூலமாக பூடான், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், ரஷியா, அமெரிக்கா, செளதி அரேபியா, தாய்லாந்து, பிரேசில் ஆகிய 9 நாடுகளுக்கு சென்றுள்ளார்.
    இதேபோல கடந்த ஆகஸ்டு முதல் நவம்பர் மாதம் வரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 7 நாடுகளுக்கும், குடியரசுத் துணை தலைவர் 6 நாடுகளுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 16 நாடுகளுக்கும், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன்16 நாடுகளுக்கும் சென்றுள்ளனர்" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: 4 மாதங்களில், 9 நாடுகளுக்கு பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோதி....! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top