728x90 AdSpace


  • Latest News

    ஆழமான அவநம்பிக்கையும், அச்சமும் பொருளாதார மந்த நிலைக்கு காரணம்: மன்மோகன் சிங்...!


    நாளிதழ்களில் வெளியான முக்கிய செய்திகளை உங்களுக்கு தொகுத்து வழங்குகின்றோம்.
    தி ஹிண்டு- அவநம்பிக்கையே நீடித்த மந்த நிலைக்கு காரணம்- மன்மோகன்சிங்
    "தி ஹிண்டு ஆங்கில நாளிதழில் இந்தியாவின் பொருளாதர நிலை குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கட்டுரை எழுதியுள்ளார்.
    இந்தியாவின் பொருளாதார நிலை ஆழமான கவலையைத் தருகிறது. இதை எதிர்க்கட்சி உறுப்பினராக அல்ல, நாட்டின் குடிமகனாக, பொருளாதார மாணவனாக கூறுகிறேன். இப்போது உண்மைகளே சாட்சிகளாகியுள்ளன.
    மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜி.டி.பி. 15 ஆண்டுகளில் இல்லாத அளவு கீழே போயுள்ளது. வேலையின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகமாக உள்ளது. வீட்டு நுகர்வு 4 பதிற்றாண்டுகளில் இல்லாத அளவு கீழே போயுள்ளது. வங்கி வராக் கடன் எப்போதும் இல்லாத அளவு உச்சத்தில் உள்ளது. மின்சார உற்பத்தி வளர்ச்சி 15 ஆண்டுகள் இல்லாத அளவு குறைந்துள்ளது.
    இது போல கீழே போயிருப்பவற்றின், அதிகமாயிருப்பவற்றின் பட்டியல் நீள்கிறது. வருத்தம் தரும் இத்தகைய புள்ளிவிவரங்களால் பொருளாதார நிலை கவலை தருகிறது என்று கூறவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் மேலும் ஆழமான சிக்கலின் வெறும் வெளிப்பாடுகள் மட்டுமே இவை" என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் மன்மோகன் சிங்.
    தொழில் முனைவோரிடம், வங்கியாளர்களிடம், தொழிலதிபர்களிடம் அச்சம் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், மக்களுக்குள்ள அவநம்பிக்கையும், அச்சமும், நம்பிக்கையின்மையும், நீடித்த மந்த நிலைக்கு காரணமாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ஆழமான அவநம்பிக்கையும், அச்சமும் பொருளாதார மந்த நிலைக்கு காரணம்: மன்மோகன் சிங்...! Rating: 5 Reviewed By: STAR Networks Sri Lanka
    Scroll to Top