728x90 AdSpace


  • Latest News

    தளபதி 64 படத்தின் தலைப்பு இதுதானா?


    பிகில் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் அடிக்கடி இணையத்தில் வலம் வருகிறது. விஜய்யின் கதாப்பாத்திரம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன.

    விஜய் கல்லூரி பேராசிரியாக நடிப்பதாக கூறப்பட்டது. நீட் தேர்வுக்கு பலியான மாணவி அனிதாவின் கதையை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது. இந்த தகவல்களை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை. படத்தின் தலைப்புக்கு தேர்வு நடந்து வருகிறது.

    இந்தப் படத்திற்கு சம்பவம் அல்லது டாக்டர் என்ற தலைப்பை வைக்க பரிசீலிப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. அனிதா பற்றிய கதை என்றால் டாக்டர் என்று பெயர் வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: தளபதி 64 படத்தின் தலைப்பு இதுதானா? Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top