728x90 AdSpace


  • Latest News

    ”பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அயோத்தி தீர்ப்பு தாக்கம் செலுத்தும்” : முன்னாள் நீதிபதி மன்மோகன் சிங் லிபரான்...!

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு, இது பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் கூறியுள்ளார்.
    பிபிசிக்கு அவர் அளித்த பேட்டியில், ”உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு நியாயமானது. உச்ச நீதிமன்றம் நியாயமான தீர்ப்புகளைத்தான் வழங்கும்'' என்றும் கூறினார்.
    பாபர் மசூதி இடிப்பு வழக்கிலும் இந்தத் தீர்ப்பின் தாக்கம் இருக்குமா என்று கேட்டதற்கு, ``பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன். அதில் எந்த சந்தேகமும் கிடையாது'' என்று அவர் பதில் அளித்தார்.
    உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அடுத்து, பாபர் மசூதி இடிப்பு சரியானது என்று நீதிமன்றத்தில் வாதிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டதற்கு, ``ஆம், அவ்வாறான வாதம் நீதிமன்றத்தில் முன் வைக்கப்படலாம்'' என்று அவர் கூறினார்.
    இந்த சர்ச்சையில் நில உரிமையை முடிவு செய்வதற்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் இருந்த அதே வேகம், மசூதி இடிப்புக்கான கிரிமினல் சதி குறித்த வழக்கிலும் காட்டப்பட வேண்டும் என்று நீதிபதி லிபரான் குறிப்பிட்டார்.
    பாபர் மசூதி இடிப்பு வழக்கிலும் உச்ச நீதிமன்றம் நியாயம் வழங்கும் என்று நீதிபதி லிபரான் நம்பிக்கை தெரிவித்தார்.
    லிபரான்படத்தின் காப்புரிமைPIB
    ``தீர்ப்பு கிடைக்கும் போதுதான், நியாயம் கிடைத்ததா இல்லையா என்பது தெரிய வரும். ஆனால் நீதிமன்றங்கள் தங்களுடைய தீர்ப்புகளை வழங்குவதில் நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அப்போது நியாயம் வழங்கப்படும் என்று நாம் நம்புகிறோம்'' என்று அவர் கூறினார்.
    நீண்ட காலம் நிலுவையில் இருந்த அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    பாபர் மசூதி இருந்த இடத்தில் இப்போது ராமர் கோவில் கட்டப்படும்.
    ஆனால் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான கிரிமினல் வழக்குகள் கடந்த 27 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.



    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ”பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அயோத்தி தீர்ப்பு தாக்கம் செலுத்தும்” : முன்னாள் நீதிபதி மன்மோகன் சிங் லிபரான்...! Rating: 5 Reviewed By: Star Fm Lanka
    Scroll to Top