728x90 AdSpace


  • Latest News

    தர்பார் படத்திற்கு ரஜினியின் சம்பளம்.. வெளியான தகவல்!


    லைகா புரடொக்‌ஷன் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ்- ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி இந்தப் படம் திரைக்கு வரவிருக்கிறது.

    இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களுள் ஒருவர் ரஜினிகாந்த். இந்நிலையில் தர்பார் படத்திற்கான அவரது சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ரூ. 100 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமை ரஜினிகாந்திற்கு கிடைக்கும். தற்போது பிரபல பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், அமீர் கான், ஷாருக்கான் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோர் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக திகழ்கின்றனர்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: தர்பார் படத்திற்கு ரஜினியின் சம்பளம்.. வெளியான தகவல்! Rating: 5 Reviewed By: STAR Networks Sri Lanka
    Scroll to Top