728x90 AdSpace


  • Latest News

    லொறியொன்று அதிக எடையுடன் பயணித்தமையால் பாரம்பரிய பாலம் உடைந்தது ; இருவர் உயிரிழப்பு...!


    பிரான்ஸின் தென்மேற்குப் பிராந்தியத்தில் 50 தொன் நிறையுடைய லொறி ஒன்று பயணித்தமையால் வருட பழைமை வாய்ந்த பாலமொன்று உடைந்து வீழ்ந்துள்ளது.

    இதன்போது இருவர் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த கொள்கலன் ஆற்றுக்குள் வீழ்ந்துள்ளது.

    பாலம் உடைந்து வீழ்ந்துள்ளதோடு, இரு வாகனங்களும் ஆற்றில் மூழ்கியுள்ளன.

    அவற்றில் ஒரு வாகனமான லொறியில் 50 தொடை எடையுடன் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

    இந்தச் சம்பவத்தில் ட்ரக் வண்டியின் சாரதி மற்றும் 15 வயதான சிறுமி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

    விபத்தின்போது காரில் பயணித்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் காயமடைந்த சிறுமியின் தாயார் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், ஐவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

    1931 ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த பாலத்தில் அதிகபட்சம் 19 தொன் எடை மட்டுமே கொண்டுசெல்லப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: லொறியொன்று அதிக எடையுடன் பயணித்தமையால் பாரம்பரிய பாலம் உடைந்தது ; இருவர் உயிரிழப்பு...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top