728x90 AdSpace


  • Latest News

    டைம்ஸ் ஆஃப் இந்தியா: "மீண்டும் இந்திய அணியில் தோனி இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் ஆதங்கம்"...!!


    வரும் டிசம்பர் மாதத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறும் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தியை 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் வெளியிட்டுள்ளது.
    ஜுலை மாதத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டி தொடருக்கு பிறகு இந்திய அணியில் இடம்பெறாத முன்னாள் கேப்டன் தோனி இந்த தொடர்களில் இடம்பிடிக்கவில்லை.
    இது ரசிகர்கள் மற்றும் சமூகவலைதளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறித்து அந்த செய்தி மேலும் விவரித்துள்ளது.
    கடந்த உலக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் தோலிவியடைந்து இந்தியா வெளியேறிய பிறகு, தோனியின் ஒய்வு குறித்து பல செய்திகள் வெளிவந்தநிலையில், அவர் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
    இந்நிலையில் அவர் மீண்டும் இடம்பிடிக்காதது குறித்து சுட்டிக்காட்டிய இந்த செய்தி, புவனேஷ்வர் குமார், முகம்மது ஷமி ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியதையும் குறிப்பிட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: டைம்ஸ் ஆஃப் இந்தியா: "மீண்டும் இந்திய அணியில் தோனி இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் ஆதங்கம்"...!! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top