728x90 AdSpace


  • Latest News

    மயங்க் அகர்வால் அசத்தல் ஆட்டம்... இந்திய வீரர்கள் விக்கெட்டை கைப்பற்ற வங்கதேசம் திணறல்...


    இந்தூரில் நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் எடுத்துள்ளது.

    வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் போட்டி இந்தூரில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த வஙக்தேச அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாளில் 1விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    தொடக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் கடந்து 243 ரன்கள் எடுத்தார். மேலும் மற்ற வீரர்கள் தங்கள் பங்கிற்கு ரன்கள் எடுக்க இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் களத்தில் உள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: மயங்க் அகர்வால் அசத்தல் ஆட்டம்... இந்திய வீரர்கள் விக்கெட்டை கைப்பற்ற வங்கதேசம் திணறல்... Rating: 5 Reviewed By: STAR Networks Sri Lanka
    Scroll to Top