728x90 AdSpace


  • Latest News

    விஜய் வீட்டு மாப்பிள்ளையாகும் அதர்வா தம்பி...!!


    விஜய் வீட்டின் மாப்பிள்ளையாகவுள்ளார் அதர்வா தம்பி. வரும் டிசம்பர் 6ம் தேதி நிச்சயதார்த்தம்.

    நடிகர் முரளியின் இளைய மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷுக்கும், பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் பேத்தியான சினேகாவுக்கும் வரும் டிசம்பர் 6ம் தேதி சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

    எஸ்.ஏ.சந்திரசேகரின் உடன்பிறந்த தங்கை மகளான விமலாவின் மகள் தான் சினேகா. இவர் சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவருக்கும்ம் ஹோட்டல் பிஸினஸ் செய்யும் அதர்வா தம்பி ஆகாஷுக்கும் சிங்கப்பூரில் எம்.பி.ஏ படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியது.

    இதனை தொடர்ந்து இரு வீட்டாரிடமும் தங்கள் காதலை வெளிப்படுத்திய போது மதம் காரணமாக கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் இருவரும் பொறுமையாக தங்கள் காதலுக்காக போராடி இரு வீட்டாரின் சம்மதம் பெற்று தற்போது திருமணம் செய்து கொள்ள உள்ளனர். இவர்கள் நிச்சயதார்த்தம் டிசம்பர் 6ம் தேதி நடைபெறவுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: விஜய் வீட்டு மாப்பிள்ளையாகும் அதர்வா தம்பி...!! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top