728x90 AdSpace


  • Latest News

    இந்திய டாக்சி சாரதியுடன் சேர்ந்து உணவருந்திய பாக்கிஸ்தான் வீரர்கள்- அவுஸ்திரேலியாவில் மனதை தொடும் சம்பவம்...


    அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாக்கிஸ்தான் அணி வீரர்கள் இந்தியாவை சேர்ந்த டாக்சி சாரதியொருவருக்கு  விருந்தளித்த சம்பவம் குறித்த விபரங்கள் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன.
    அவுஸ்திரேலியா பாக்கிஸ்தான் அணிகளிற்கு இடையிலான  போட்டிகளில் பெண்  வர்ணணையாளராக பணியாற்றும் அலிசன் மிட்ச்செல் சக வர்ணணையாளர் மிட்சல்ஜோன்சனிற்கு தெரிவித்த கதையே சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
    சில நாட்களிற்கு முன்னர் பாக்கிஸ்தான் வீரர்கள் விடுத்த அழைப்பினை தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலிற்கு சென்ற இந்தியாவை சேர்ந்த டாக்சி சாரதியொருவர் அவர்களை அழைத்துக்கொண்டு சென்று அவுஸ்திரேலியாவை சுற்றி காண்பித்துள்ளார்.
    பாக்கிஸ்தான் வீரர்கள் இந்திய உணவகமொன்றிற்கு செல்லவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
    இந்தியாவை சேர்ந்த டாக்சி சாரதி அவர்களை  இந்திய உணவகத்தி;ற்கு அழைத்து சென்றுள்ளார்,எனினும் பாக்கிஸ்தான் வீரர்கள் டாக்சிக்கான பணத்தை வழங்கியவேளை அவர் அதனை ஏற்கமாட்டேன் என அடம்பிடித்துள்ளார்.
    இதனை தொடர்ந்து பாக்கிஸ்தான் வீரர்கள் அவரை தங்களுடன் உணவருந்துமாறு அழைத்துள்ளனர் , குறிப்பிட்ட ஹோட்டலில் இந்தியாவை சேர்ந்த டாக்சி சாரதியுடன் சேர்ந்த ஒன்றாக உணவருந்தியுள்ளனர்.
    பாக்கிஸ்தான் வீரர்கள் ஐவருடன் தான் உணவகத்தில் அமர்ந்திருக்கும் படத்தை டாக்சி சாரதி காண்பித்தார் என  அலிசன் மிட்ச்செல்  தெரிவித்துள்ளார்.
    அலிசன் இந்த சம்பவத்தை வர்ணி;க்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது.
    இதற்கு பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    சிறந்த கிரிக்கெட் கதைகள் டாக்சியிலேயே இடம்பெறுகின்றன என ஒருவர் பதிவு செய்துள்ளார்.
    கிரிக்கெட் எப்படி மக்களை இணைக்கின்றது என்பதற்கான மிகச்சிறந்த கதையிது என மற்றொருவர் பதிவு செய்துள்ளார்.
    இரு நாடுகளிற்கும் இடையிலான பதற்றத்தை கருத்தில்கொள்ளும்போது இது மனதைமகிழ்விக்கும் கதையிது என ஒருவர் பதிவு செய்;துள்ளார்.
    நான் டாக்சி சாரதியாகயிருந்தால் அதனையே செய்வேன்,எவ்வளவு வேற்றுமைகள் இருந்தாலும் நாங்கள் ஒருவர், ஒரே மண்ணில் பிறந்தவர்கள்,ஒரே இனத்தை சேர்ந்தவர்கள்,இந்த சம்பவம் எனது மனதை தொட்டுவிட்டது என ஆகாஸ் குப்தா என்பவர் பதிவு செய்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: இந்திய டாக்சி சாரதியுடன் சேர்ந்து உணவருந்திய பாக்கிஸ்தான் வீரர்கள்- அவுஸ்திரேலியாவில் மனதை தொடும் சம்பவம்... Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top