728x90 AdSpace


  • Latest News

    இலங்கை தேர்தல் முடிவு: கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து...!


    இலங்கை ஜனாதிபதி தேர்தல் சனிக்கிழமை முடிந்து உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இரவு முழுவதும் தொடர்ந்த வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவுகள் இன்னும் முறைப்படி அறிவிக்கப்படவில்லை.
    எனினும், மொத்தம் பதிவான வாக்குகளில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகள் மூலம் மட்டுமே கோட்டாபய ராஜபக்ஷ 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
    இதனடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபாய தாம் வெற்றி பெற்றதாக அறிவித்தார். தமது தோல்வியை ஒப்புக் கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரும், இரண்டாமிடம் பெற்றவருமான சஜித் பிரேமதாச அறிவித்தார்.
    எனினும், தமிழர்கள்- முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் பெருவாரியான வாக்குகள் முன்னிலை பெற்றார் சஜித் பிரேமதாச.

    இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து

    இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாக ட்விட்டரில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி பதிவிட்டுள்ளார்.
    "இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இருநாடுகளுக்கும், அதன் குடிமக்களுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை ஆழப்படுத்துவதற்கும், பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்" என்று தனது ட்விட்டர் பதிவில் நரேந்திர மோதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: இலங்கை தேர்தல் முடிவு: கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து...! Rating: 5 Reviewed By: STAR Networks Sri Lanka
    Scroll to Top