728x90 AdSpace


  • Latest News

    `புதுப்பேட்டை', `விருமாண்டி' படப் புகழ் நடிகர் பாலா சிங் காலமானார்!


    மேடை நாடகக் கலைஞராகத் தன் வாழ்வைத் தொடங்கி. பின்னர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராக உயர்ந்தவர் பாலா சிங். 1952-ம் ஆண்டு கன்னியாகுமரியில் பிறந்த இவர், நடிப்பின் மீது கொண்ட அதீத ஆர்வத்தால் தன் கல்லூரிக் காலத்திலேயே மேடை ஏறி நடிக்கத் தொடங்கினார். பின்னர், நடிப்புத் தாகம் இன்னும் அதிகமாக சென்னைக்கு ரயில் ஏறிய இவர், தேசிய நாடக பள்ளியில் சேர்ந்து முறையான நடிப்பைக் கற்றுக்கொண்டார். 

    தொடர்ந்து பல்வேறு மேடை நாடகங்களில் நடிப்பதையே தன் தொழிலாக மாற்றிக்கொண்டார்.


    பாலா சிங்

    பாலா சிங்

    1983-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மலைமுகலிலே தெய்வம் (malamukalile daivam) என்ற படம்தான் பாலா சிங்குக்கு சினிமாவை அறிமுகப்படுத்தியது. அதில் சிறிய வேடத்தில் நடித்திருந்த அவர், பின்னர் தொடர்ந்து சில மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் சில காலம் யூகி சேதுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். 

    அப்போதுதான் நடிகர் நாசரின் நட்பு கிடைத்துள்ளது. நாசர் இயக்கத்தில் வெளியான அவதாரம் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கால்பதித்தார். 

    இதைத் தொடர்ந்து உல்லாசம், இந்தியன், ராசி போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் வில்லன் வேடத்திலும் நடித்து பிரபலபலமானார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: `புதுப்பேட்டை', `விருமாண்டி' படப் புகழ் நடிகர் பாலா சிங் காலமானார்! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top