728x90 AdSpace


  • Latest News

    எம்.ஜி.ஆர் வேடத்திற்காக தனது தோற்றத்தை மாற்றிய அரவிந்தசாமி...


    மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் ஏ.எல்.ராஜா இயக்கவுள்ளார். இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். இப் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தலைவி படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்தசாமி நடிக்கிறார். இந்த வேடத்தில் நடிக்க அரவிந்தசாமி தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். அந்த போட்டோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அரவிந்தசாமி மீசையில்லாமல் எம்.ஜி.ஆர் போலவே இருக்கிறார். இதனால் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.

    தமிழ், தெலுங்கு ஹிந்தி மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த சில நாட்களில் சென்னையில் தொடங்கவுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: எம்.ஜி.ஆர் வேடத்திற்காக தனது தோற்றத்தை மாற்றிய அரவிந்தசாமி... Rating: 5 Reviewed By: STAR Networks Sri Lanka
    Scroll to Top