728x90 AdSpace


  • Latest News

    இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு...!


    நாட்டின் 6 மாவட்டங்களை மையமாகக்கொண்டு இன்று (27) முதல் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

    டெங்கு நோயாளர்கள் அதிகளவில் பதிவாகியுள்ள மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, கொழும்பு, கம்பஹா, மாத்தளை ஆகிய 6 மாவட்டங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர், டொக்டர் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

    இன்று முதல் எதிர்வரும் 6 நாட்களுக்கு இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுப்பு...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top