728x90 AdSpace


  • Latest News

    ஜாகிர் நாயக்கை ஏன் நாடு கடத்தவில்லை?: இந்தியாவுக்கு விளக்கம் அனுப்ப மலேசியா முடிவு...!

    இந்தியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த இயலாது என மலேசிய அரசு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
    இது தொடர்பாக இந்திய அரசுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை மலேசியா அனுப்பி வைக்கும் என மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோ சைஃபுதின் அப்துல்லா கூறியுள்ளார்.
    இந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் குறித்து அரசாங்க தலைமை வழக்கறிஞருடன் (அட்டர்னி ஜெனரலுடன்) தாம் கலந்தாலோசிக்க இருப்பதாக நாடாளுமன்றத்தில் அவர் மேலும் குறிப்பிட்டார்.
    பண மோசடி உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகளின் பேரில் மதபோதகர் ஜாகிர் நாயக்கை தேடப்படும் நபராக அறிவித்துள்ளது இந்திய அரசு. இந்நிலையில் அவருக்கு நிரந்தர வசிப்பிட உரிமையை வழங்கியுள்ளது மலேசிய அரசு.
    சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியபோது ஜாகிர் நாயக் தெரிவித்த சில கருத்துக்களால் அங்கு சர்ச்சை வெடித்தது.
    மலேசிய வாழ் இந்தியர்கள் பிரதமர் மகாதீருக்கு விசுவாசமாக இல்லை என்றும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைத்தான் ஆதரிக்கிறார்கள் என்றும் ஜாகிர் நாயக் பேசியதாக புகார் எழுந்தது.
    பிரதமர் மகாதீர்படத்தின் காப்புரிமைVCG
    Image captionபிரதமர் மகாதீர்
    மேலும், தாம் மலேசியாவில் இருந்து வெளியேற வேண்டும் எனில், தனக்கு முன்பே அந்நாட்டிற்கு விருந்தினர்களாக வந்திறங்கிய சீனர்கள் முதலில் வெளியேற வேண்டும் என்றும் ஜாகிர் நாயக் பேசியதை அடுத்து, அவரை நாடு கடத்துமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
    ஆனால், ஜாகிர் நாயக்கை நாடு கடத்தும் எண்ணம் இல்லை என்று பிரதமர் மகாதீர் இருமுறை திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

    பாங்காக்கில் சந்தித்துப் பேசிய இந்திய, மலேசிய வெளியுறவு அமைச்சர்கள்

    இந்நிலையில் மலேசிய வெளியுறவு அமைச்சர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த முடியாததற்கான விளக்கத்தை அளிக்கும் வகையில் இந்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும் எனக் கூறியுள்ளார் மலேசிய வெளியுறவு அமைச்சர்.
    சர்ச்சைக்குரிய இந்த மதபோதகரை நாடு கடத்த வேண்டும் என இந்திய தரப்பில் இருந்து கோரிக்கை வந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஜாகிர் நாயக்கை ஏன் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இயலாது என்பது குறித்து மலேசியப் பிரதமர் ஏற்கெனவே விளக்கம் அளித்திருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
    இந்நிலையில் கடந்த வாரம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற 35ஆவது ஆசியான் மாநாட்டின் போது இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை தாம் சந்தித்ததாகக் குறிப்பிட்ட டத்தோ சைஃபுதின் அப்துல்லா, அச்சமயம் ஜாகிர் நாயக் விவகாரம் குறித்து விவாதித்த்தாகத் தெரிவித்தார்.
    போராட்டம்படத்தின் காப்புரிமைSAJJAD HUSSAIN
    "எங்கள் சந்திப்பின் போது ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவது குறித்து அமைதியான முறையில் அவர் (ஜெய்சங்கர்) விவரம் கேட்டறிந்தார். பின்னர் மலேசியாவின் நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக பதில் அனுப்பும்படி கூறினார். அதன்படி, கடிதம் அனுப்ப இருக்கிறோம்," என்று மலேசிய நாடாளுமன்றத்தில் அமைச்சர் டத்தோ சைஃபுதின் அப்துல்லா கூறினார்.
    இந்தியாவுக்கு அனுப்ப உள்ள கடிதத்தில் என்னென்ன விவரங்கள் துல்லியமாகக் குறிப்பிடப்பட வேண்டும் என்பது குறித்து அரசு தலைமை வழக்கறிஞருடன் தாம் கலந்தாலோசிக்க இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
    இதையடுத்து ஜாகிர் நாயக் மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ஜாகிர் நாயக்கை ஏன் நாடு கடத்தவில்லை?: இந்தியாவுக்கு விளக்கம் அனுப்ப மலேசியா முடிவு...! Rating: 5 Reviewed By: Star Fm Lanka
    Scroll to Top