728x90 AdSpace


  • Latest News

    நாடாளுமன்ற வரலாற்றிலேயே துன்பமிக்க தினம்.. ராகுல்காந்தி!


    நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என நேற்று நாடாளுமன்றத்தில் பிரக்யா சிங் தாக்கூர் கூறினார். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அவர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவில் இருந்து பிரக்யா சிங் தாக்கூர் நீக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார்.

    இந்நிலையில் இதுகுறித்து ட்வீட் செய்துள்ள ராகுல்காந்தி, ‘தீவிரவாதி பிரக்யா, தீவிரவாதி கோட்சேவை தேசபக்தர் என கூறியுள்ளார். இது இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே துன்பமிக்க தினம்' என பதிவிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: நாடாளுமன்ற வரலாற்றிலேயே துன்பமிக்க தினம்.. ராகுல்காந்தி! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top