728x90 AdSpace


  • Latest News

    தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் வௌிநாட்டுக் கண்காணிப்புக் குழு...!



    ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு 17 பேர் கொண்ட வௌிநாட்டு கண்காணிப்புக்குழு நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

    தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பிற்கிணங்க இந்தியா, இந்தோனேஷியா, தென் கொரியா, தென்னாபிரிக்கா, மாலைதீவு, பூட்டான், பிலிப்பைன்ஸ் மற்றும் மியன்மார் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்புக்குழு நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

    இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 150 வௌிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான அனைத்து பிரசார நடவடிக்கைகளையும் நாளை (13) நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையில் வௌிநாட்டுக் கண்காணிப்புக் குழு...! Rating: 5 Reviewed By: STAR Networks Sri Lanka
    Scroll to Top