கருத்துகளை பதிவு செய் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் பாக்யராஜ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு செல்போன் பயன்பாட்டுக்கு பிறகு போய்விட்டது. பாலியல் பிரச்சனைக்கு மூலக்காரணம் பெண்கள் தான். ஆண்கள் தவறான பழக்கம் இருந்தாலும் குடும்பத்தை தொந்தரவு செய்வதில்லை. ஆனால் வேறு ஆண்களுடன் செல்லும் பெண்கள் கணவரையும், குழந்தையையும் கொலை செய்கின்றனர்.
அதனால் தான் பெண்களை கட்டுப்பாடுடன் வைத்திருக்க வேண்டும் என முன்னோர்கள் கூறியிருந்தனர். செல்போன் வந்ததால் தவறு செய்வதற்கு எளிதாக வழி கிடைக்கிறது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது என்பது போல பெண்கள் இடம்கொடுக்காமல் தவறு நடக்க வழி கிடையாது. பெண்கள் ஜாக்கிரதையாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும்.
ஆண்களை மட்டும் குறை கூறுவதில் அர்த்தம் இல்லை. பொள்ளாச்சியில் நடந்த தவறுக்கு ஆண்கள் மட்டும் காரணமல்ல. பெண்களின் பலவீனமே காரணம். அவன் செய்தது தவறு என்றால் அந்த வாய்ப்பை பெண்கள் உருவாக்கி கொடுத்தது தான் மிகப்பெரிய தவறு' என கூறியுள்ளார்.