728x90 AdSpace


  • Latest News

    ஜொவ்ரா ஆர்ச்சரிடம் மன்னிப்பு கோருகின்றது நியுசிலாந்து கிரிக்கெட்- ஏன்?


    நியுசிலாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜொவ்ரா ஆர்ச்சரை ரசிகர் ஒருவர் இனரீதியில் நிந்தித்தமைக்காக ஆர்ச்சரிடம் மன்னிப்பு கேட்கவுள்ளதாக நியுசிலாந்து கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
    போட்டியின் இறுதி நாளான இன்று இங்கிலாந்தின் தோல்வியை தவிர்ப்பதற்காக ஆர்ச்சர் கடுமையாக போராடினார்,ஐம்பது பந்துகளில் 30 ஓட்டங்களை பெற்றார் எனினும் அவரால் இங்கிலாந்தினை காப்பாற்ற முடியவில்லை.
    போட்டிமுடிவடைந்த பின்னர் டுவிட்டரில் கருத்தொன்றை பதிவு செய்துள்ள ஆர்ச்சர் தான் இனரீதியில் கேலி செய்யபட்டேன் என தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து அணியின் இனிங்ஸ் முடிந்து வெளியேறிக்கொண்டிருந்தவேளை தான்  இனரீதியில் கேலி செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
    இன்று இனரீதியிலான கேலிகளை செவிமடுத்தமை சிறிய குழப்பத்தை ஏற்படுத்தியது,அந்த ஒரு நபரை தவிர ஏனைய ரசிகர்கள் மிகச்சிறப்பான விதத்தில் நடந்துகொண்டனர் என ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.
    இதனை தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள நியுசிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை குற்றவாளி அடையாளம் காணப்படவில்லை ஆனால் ஆர்ச்சரிடம் மன்னிப்பு கேட்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.
    முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின்னர் மைதானத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தவேளை இனரீதியில் கேலி செய்யப்பட்ட ஆர்ச்சரை தொடர்புகொண்டு அவரிடம் மன்னிப்பு கோருவோம் என நியுசிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.
    சிசிடிவியை பயன்படுத்தி அந்த நபரை அடையாளம் காணமுயல்வதாக நியுசிலாந்து கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ஜொவ்ரா ஆர்ச்சரிடம் மன்னிப்பு கோருகின்றது நியுசிலாந்து கிரிக்கெட்- ஏன்? Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top