கத்தி சண்டை படத்திற்கு பிறகு விஷால், தமன்னா நடிப்பில் நவம்பர் 15ம் தேதி ஆக்ஷன் படம் வெளியாகிறது. சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். சுந்தர் சி மற்றும் விஷால் கூட்டணி என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
இந்தப் படம் குறித்து விஷால் கூறும் போது, ‘நான் நடித்த படங்களில் அதிக ஆக்ஷன் காட்சிகளை கொண்ட படம் இதுதான். ஆக்ஷன் படத்தின் சண்டை காட்சிகளின் போது தமன்னாவை பலமுறை அடித்திருக்கிறேன். அதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.