728x90 AdSpace


  • Latest News

    அயோத்தி வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் இறுதித்தீர்ப்பு...!



    ராமஜென்ம பூமி என்று பரவலாக அறியப்படும் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கின் தீர்ப்பை நாளை(சனிக்கிழமை) உச்ச நீதிமன்றம் வழங்கவுள்ளது.

    நாளை காலை 10:30 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அதனைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும்.

    அயோத்தி நிலப் பிரச்சனையை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

    அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் இறுதி விசாரணை அக்டோபர் 18ம் தேதி புதன்கிழமை முடிவடைந்தது. மற்ற வாதங்களை அடுத்த மூன்று நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு, 40 நாட்கள் விசாரணைக்கு பிறகு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: அயோத்தி வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் இறுதித்தீர்ப்பு...! Rating: 5 Reviewed By: Star Fm Lanka
    Scroll to Top