வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, பதுளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் 100 – 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முல்லைத்தீவு, வவுனியா,அனுராதபுரம், இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக இடிமின்னலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்த்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.