728x90 AdSpace


  • Latest News

    மகாராஷ்டிராவில் பாஜக-வுக்கு பின்னடைவு: சிவசேனையை ஆட்சியமைக்க அழைத்தார் ஆளுநர்...!

    மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பாஜக-வுக்கும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனைக்கும் இடையே நிலவி வந்த இழுபறியில் பாஜக-வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
    பாஜக தம்மால் ஆட்சி அமைக்க முடியாது என்று அறிவித்துவிட்ட நிலையில், சிவசேனையை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவுடன் ஆட்சியமைக்க தயாராக உள்ளது சிவசேனை.
    மகாராஷ்டிரத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 வாரங்களுக்கு மேல் ஆகிறது. இந்த மாநிலத்தில், பாஜக-சிவசேனைக் கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும், எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லை. எனவே, எந்தக் கட்சி முதல்வர் பதவியை எடுத்துக் கொள்வது என்பது தொடர்பாக பாஜக-வுக்கும், சிவசேனைக்கும் இடையே போட்டி தொடங்கியது.

    அரவிந்த் சாவந்த்படத்தின் காப்புரிமை
    Image captionஅரவிந்த் சாவந்த்

    இரண்டு கட்சியுமே விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாத நிலையில், தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால், சிவசேனை தன்னுடன் இல்லாத நிலையில், தங்களால் ஆட்சியமைக்க முடியாது என்று பாஜக தெரிவித்துவிட்டது.
    இதையடுத்து சிவசேனையை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் ஆளுநர் கோஷ்யாரி.
    விலகும் சிவசேனை மத்திய அமைச்சர்- முடிவுக்கு வருகிறதா பாஜக உறவு?
    இதனிடையே மத்திய பாஜக தலைமையிலான அரசில் கனரகத் தொழில் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும், மக்களவை சிவசேனைக் குழுத் தலைவரான அரவிந்த் சாவந்த் அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறார்.

    சோனியா காந்திபடத்தின் காப்புரிமை

    இது பாஜக- சிவசேனை உறவு முடிவுக்கு வந்ததாகக் காட்டுகிறது.
    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தலைமையில் அந்தக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அது போல காங்கிரஸ் கட்சியும் முக்கிய கூட்டம் ஒன்றை டெல்லியில் நடத்துகிறது. மல்லிகார்ஜுன கார்கே, அகமது பட்டேல் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
    காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றோடு எங்களுக்கு கருத்து மாறுபாடு உண்டு. ஆனால், அவை துரோகிகள் அல்ல என்று தெரிவித்துள்ளார் சிவசேனைத் தலைவர் சஞ்சய் ராவத். காஷ்மீரில் மெகபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர், தாங்கள் காங்கிரசுடன் குறைந்தபட்ச பொதுத் திட்டம் ஒன்றின் கீழ் கைகோர்க்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
    இதனிடையே சிவசேனையில் யார் முதல்வராவார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மறைந்த பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்ய தாக்கரே, சுபாஷ் தேசாய், தற்போது சிவசேனை சட்டமன்றக் குழுத் தலைவராக உள்ள ஏக்நாத் ஷிண்டே ஆகிய நால்வரில் ஒருவர் முதல்வராக வாய்ப்புள்ளது.
    பல்வேறு கட்சிகளும் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை வெவ்வேறு ஓட்டல்களில் தங்கவைத்துள்ளன. ஆட்சியமைப்பதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முக்கியப் பங்கு வகிப்பார் என்று தெரிகிறது.

    @BBC_Ta
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: மகாராஷ்டிராவில் பாஜக-வுக்கு பின்னடைவு: சிவசேனையை ஆட்சியமைக்க அழைத்தார் ஆளுநர்...! Rating: 5 Reviewed By: STAR Networks Sri Lanka
    Scroll to Top