728x90 AdSpace


  • Latest News

    சீனாவில் முஸ்லிம்கள் துன்புறுத்தலா? - காணொளியை நீக்கியதற்கு டிக்டாக் மன்னிப்பு மற்றும் பிற செய்திகள்...!


    சீனாவில் வீகர் இன முஸ்லிம்கள் நடத்தப்படும் விதத்தை விமர்சிக்கும் வகையில் டிக்டாக் செயலியில் காணொளி வெளியிட்டிருந்த அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண்ணின் கணக்கு முடக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு சீனாவை சேர்ந்த டிக்டாக் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளதுடன், அவரது கணக்கை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.
    இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள டிக்டாக் நிறுவனம், அமெரிக்காவை சேர்ந்த 17 வயதான பெரோசா அசிஸ் மீது ஏற்கனவே மற்றொரு காணொளி தொடர்பாக எழுப்பப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இதற்கும் சீனாவின் அரசியலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
    மேலும், அவரது குறிப்பிட்ட காணொளி நீக்கப்பட்டதற்கு 'மனித தவறுகளே' காரணம் என்று அந்நிறுவனம் விளக்கமளித்துளளது.
    சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கை சேர்ந்த பைட்டான்ஸ் எனும் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்டாக், தங்களது உள்நாட்டு (சீனா) உள்ளடக்க கட்டுப்பாட்டு விதிமுறைகள் சீனாவிற்கு வெளியே உள்ள இடங்களுக்கு பொருந்தாது என்று கூறுகிறது.
    எனினும், டிக்டாக் நிறுவனத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அசிஸ் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: சீனாவில் முஸ்லிம்கள் துன்புறுத்தலா? - காணொளியை நீக்கியதற்கு டிக்டாக் மன்னிப்பு மற்றும் பிற செய்திகள்...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top