728x90 AdSpace


  • Latest News

    கோட்டாபய ராஜபக்சவின் பிரஜாவுரிமை தொடர்பில் அமெரிக்க தூதரகம் பதில்...!



    அமெரிக்க சட்டத்துக்கு அமைய விசா மற்றும் பிரஜாவுரிமை தொடர்பில் ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை தம்மால் வழங்கமுடியாது என, கோட்டாபய ராஜபக்சவின் பிரஜாவுரிமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு நியூஸ் வினவியமைக்கு அமெரிக்க தூதரகம் பதிலளித்துள்ளது.

    கோட்டாபய ராஜபக்ச தொடர்பிலான மூன்று விடயங்கள் தொடர்பில் வினவி அமெரிக்கா தூதரகத்துக்கு நாம் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தோம்.

    அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கப்பட்டமை தொடர்பிலான ஆவணத்தில் கோட்டாபய ராஜபக்சவின் பெயர் உள்ளடங்கியிருந்ததா?

    ஹரீன் பெர்ணான்டோ மற்றும் நாமல் ராஜபக்சவின் டுவிட்டர் பதிவுகளின் உண்மை தன்மை ?

    கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்தும் அமெரிக்க பிரஜையா இல்லையா ?

    உள்ளிட்ட மூன்று கேள்விகளை முன்னிறுத்தி அமெரிக்கா தூதரகத்திடம் நாம் விளக்கம் கோரியிருந்தோம்.

    ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸிவின் அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டை ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நிராகரித்துள்ளார்.

    இன்று இடம்பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸிவன் அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் தௌிவுப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்

    ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இது குறித்து தௌிவுப்படுத்தினார்.

    கட் –

    கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க பிரஜாவுரிமை இதுவரை மீளப்பெறப்படவில்லையென அமைச்சர் ஹரீன் பெர்னான்டோ டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க பிராஜாவுரிமை மீளப்பெறப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆவணத்தையும் பதிவிட்டுந்தார்.

    இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் தமது பதிவை நீக்கியுள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இது குறித்து தாம் கவலையடைவதாக அவர் கூறியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: கோட்டாபய ராஜபக்சவின் பிரஜாவுரிமை தொடர்பில் அமெரிக்க தூதரகம் பதில்...! Rating: 5 Reviewed By: Star Fm Lanka
    Scroll to Top