728x90 AdSpace


  • Latest News

    சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டி: வட பகுதி மாணவர்கள் இருவருக்கு வெள்ளி இன்றைய தினம் ஒரு புதிய சாதனை...!


    கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமான சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில் வட பகுதி பாடசாலை மாணவர்கள் இருவருக்கு வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. அத்துடன் கொஸ்கொட மாணவர் ஒருவர் புதிய சாதனை நிலைநாட்டினார்.
    14 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளுக்கான உயரம் பாய்தல் போட்டியில் 1.42 மீற்றர் உயரம் பாய்ந்த தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் எஸ். சுவர்ணா வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
    15 வயதுக்குட்பட்ட ஆண் பிள்ளைகளுக்கான தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியைச் சேர்ந்த ஏ. சுகிஸ்டன் 39.80 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
    போட்டியின் முதலாம் நாளான இன்றைய தினம் 15 வயதுக்குட்பட்ட ஆண் பிள்ளைகளுக்கான உயரம் பாய்தல் பொட்டியில் கொஸ்கொட ஹேகல்ல மகா வித்தியாலய மாணவன் டி. டி சில்வா 1.86 மீற்றர் உயரம் பாய்ந்து புதிய போட்டி சாதனை நிலைநாட்டினார்.
    இந்த சாதனை மட்டுமே முதலாம் நாள் நிலைநாட்டப்பட்ட புதிய சாதனையாகும்.
    வாழ்த்துக்கள்...
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டி: வட பகுதி மாணவர்கள் இருவருக்கு வெள்ளி இன்றைய தினம் ஒரு புதிய சாதனை...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top