728x90 AdSpace


  • Latest News

    மகாராஷ்டிரா அரசியல்: நம்பிக்கை வாக்கெடுப்பு - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது...!


    பாரதிய ஜனதா கட்சி இன்றே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் வாதம் .
    அரசியல் கட்சிகளின் வழிகாட்டுதல்களின் கீழ் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார் மகாராஷ்டிரா ஆளுநர் என்றும் கபில் சிபில் வாதிட்டார்.

    நம்பிக்கை வாக்கெடுப்பு

    மகாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதி மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கை இன்று காலை 11.30 மணிக்கு விசாரிக்க தொடங்கியது உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு.
    மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக நேற்று பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் முதலமைச்சராக பதவியேற்றார்.
    தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். அஜித் பவரின் முடிவை தாங்கள் ஆதரிக்கவில்லை என அவரது கட்சி தெரிவித்துள்ளது.
    மகராஷ்டிரா அரசியல்: சரத் பவாரை சந்தித்த பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்
    தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் சிவசேனை ஆட்சியமைக்க முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில் இது நிகழ்ந்துள்ளது. இன்றே (ஞாயிற்றுக்கிழமை) பாஜக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என இந்த கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன.
    மனுதாரர்களின் சார்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார்.
    சட்டம் நிலைநிறுத்தப்படும் என தாங்கள் நம்புவதாக ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் கூறி இருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங்.
    மகராஷ்டிரா அரசியல்: சரத் பவாரை சந்தித்த பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்படத்தின் காப்புரிமை
    இந்த வழக்கை நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண் மற்றும் சஞ்சீவ் கன்னா அமர்வு விசாரிக்கிறது.
    பா.ஜ.கவுடன் இணைந்து துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார் மனம் திருந்தி மீண்டும் வருவார் என தாங்கள் நம்புவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
    அப்படி வரும்பட்சத்தில், கதவுகள் திறந்தே உள்ளன என்றும் அவர் கூறி உள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: மகாராஷ்டிரா அரசியல்: நம்பிக்கை வாக்கெடுப்பு - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியது...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top