"அதிக உற்பத்தி சூழலியலில் பெரும் தாக்கம் செலுத்துகிறது. சூழலியலைப் பாதுகாக்க உற்பத்தியைக் குறைக்க வேண்டும். இதற்காக நுகர்வை ஊக்குவிக்கும் செயல்களை எதிர்க்க வேண்டும்" என்று ப்ளாக் ஃப்ரைடே தள்ளுபடி விற்பனைக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துள்ளவர்கள் கூறுகிறார்கள்.
இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமேசான் நிறுவனம், ஒவ்வொருவரின் கருத்தையும் நாங்கள் மதிக்கிறோம். போராடும் உரிமை அனைவருக்கும் இருக்கிறது. ஆனால், இந்த போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளது.