728x90 AdSpace


  • Latest News

    ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு...!!



    ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று (13) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன.

    இந்த விடயம் தொடர்பில் வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தௌிவுபடுத்தியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

    இன்று நள்ளிரவுடன் பிரசாரக் கூட்டங்களுக்கும் ஊடகங்களினூடான விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

    ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைள் நிறைவடைவதுடன் பிரதேச மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரசார அலுவலகங்களும் அகற்றப்பட வேண்டும என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

    இதேநேரம், தேர்தல் தொடர்பான பதாகைகள், சுவரொட்டிகளை அகற்றும் பணிகளும் முன்னெடுக்கப்படுவதாக சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு...!! Rating: 5 Reviewed By: STAR Networks Sri Lanka
    Scroll to Top