பாலசந்தரின் சிலை திறப்பு விழாவிற்கு கவிஞர் வைரமுத்து அழைத்தது குறித்து பாடகி சின்மயி தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
கமல் தனது 65வது பிறந்த நாளை கடந்த 7ம் தேதி கொண்டாடினார். அத்துடன் கமலின் 60 ஆண்டு கால சினிமா விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் கமல், ரஜினி, வைரமுத்து மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதன் போட்டோகள் இணையத்தில் வெளியானது.
அந்த புகைப்படத்தை தனது இணையப் பக்கத்தில் பகீர்ந்த பாடகி சின்மயி,தான் இங்கு வைரமுத்துவை குறிப்பிடுவதாகவும், பாலியல் குற்றம் செய்தவர்கள் வெளியே பல நிகழ்ச்சிகளில் முன்னிலை வகித்து வருவதாகவும் ஆனால் பாலியல் தொல்லைக்கு ஆளான நான் மட்டும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.