728x90 AdSpace


  • Latest News

    பதவி விலகிய பொலிவிய அதிபர் மொலாரஸுக்கு தஞ்சம் வழங்க முன்வரும் மெக்சிகோ மற்றும் செய்திகள்..

    பொலிவியாவின் முன்னாள் அதிபர் ஏவோ மோராலஸுக்கு மெக்சிகோ அரசியல் தஞ்சம் வழங்க முன்வந்துள்ளது.
    சர்ச்சைக்குரிய தேர்தலுக்கு எதிராக சில வாரங்களாக நடைபெறும் போராட்டங்களை தொடர்ந்து, தான் பதவியில் இருந்து விலகுவதாக மோராலஸ் அறிவித்த ஒரு நாளுக்கு பின்னர் மெக்ஸிகோவின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
    மோராலஸ் இது பற்றி இன்னும் உறுதியாக எதையும் கூறவில்லை.
    முன்னதாக, தன்னை பதவியில் இருந்து விலக கட்டாயப்படுத்திய "இருண்ட அதிகாரங்களை" எதிர்க்க வேண்டுமென அவர் தனது ஆதரவாளர்களிடம் வலியுறுத்தியிருந்தார்.
    காவல்துறையினரோடு நடைபெற்ற மோதல்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
    Image captionகாவல்துறையினரோடு நடைபெற்ற மோதலில் சுமார் 20 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
    காவல்துறையினரோடு இவரது ஆதரவாளர்கள் மோதி கொண்டதில் சுமார் 20 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
    பொலிவியாவின் அதிபராக பதவியேற்ற முதலாவது மண்ணின் மைந்தரான மோராலஸ் பதவி விலக வேண்டுமென அந்நாட்டின் படைத்தலைவர் வெளிப்படையாக அறிவித்த பின்னர், அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக மோராலஸ் அறிவித்தார்.
    புதிய தேர்தல் நடைபெறும் வரை தற்காலிக அதிபராக செயல்பட இருப்பதாக சென்ட் அவையின் துணைத்தவைலர் கூறியுள்ளார்.
    மோரோலஸின் ஆதரவாளர்கள் லா பாஸில் காவல்துறையினரோடு மோதினர்.படத்தின் காப்புரிமைREUTERS
    Image captionமோரோலஸின் ஆதரவாளர்கள் லா பாஸில் காவல்துறையினரோடு மோதினர்.
    கோக்கோ விவசாயியான மோராலஸ் 2006ம் ஆண்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வறுமை ஒழிப்பு, பொலிவியாவின் பொருளாதா மேம்பாடு போன்ற செயல்பாடுகளால் இவர் பெரும் புகழ்பெற்றார்.
    ஆனால், அரசியல் சாசன விதிகளுகளுக்கு முரணாக கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் நான்காவது முறையாக அதிபர் பதவிக்கு மோராலஸ் போட்டியிட்டது பெரும் சர்ச்சையானது. இந்த தேர்தலில் மோசடிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
    @BBC_Tamil
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: பதவி விலகிய பொலிவிய அதிபர் மொலாரஸுக்கு தஞ்சம் வழங்க முன்வரும் மெக்சிகோ மற்றும் செய்திகள்.. Rating: 5 Reviewed By: STAR Networks Sri Lanka
    Scroll to Top