728x90 AdSpace


  • Latest News

    'தமிழ் தலைமைகளின் சுயலாப அரசியலே தமிழர்களின் துன்பங்களுக்கு காரணம்' - டக்ளஸ் தேவானந்தா...!

    இலங்கையில் புதிதாக உருவாகியுள்ள ஆட்சியின் ஊடாக இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு முன்னரை விடவும் வலுவாக அமையும் என நம்புவதாக கடல் தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கின்றார்.
    பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
    இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக இலங்கை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில், இலங்கை தமிழர் பிரச்சனையை மிக இலகுவாக தீர்க்க முடியும் என டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார்.
    இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆகியோருக்கு இடையில் 1987ஆம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தமே இலங்கை - இந்திய ஒப்பந்தமாகும்.
    ஜே.ஆர்.ஜயவர்தனபடத்தின் காப்புரிமை
    Image captionஜே.ஆர்.ஜயவர்தன
    இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் வகையில் இந்த ஒப்பந்தத்தின் ஊடாக மாகாண சபைகள் நிறுவப்பட்டன.
    இதன்படி, தமிழர்களுக்கு வடகிழக்கு மாகாண சபை நிறுவப்பட்ட, பின்னர் அந்த மாகாண சபை முழுமையாக இயங்காமல் போனது.
    இலங்கை முழுவதும் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளும் நிர்வாக மொழிகளாக இருக்க வேண்டும் என்பதும், சிங்கள மொழிகள் பேசும் பகுதிகளில் அரசின் பொதுப்பதிவேடுகள் மற்றும் அலுவல்கள் சிங்கள மொழியிலும், அவ்வாறே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் ஓர் அம்சமாக இருந்தது.
    @BBC_Tamil
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: 'தமிழ் தலைமைகளின் சுயலாப அரசியலே தமிழர்களின் துன்பங்களுக்கு காரணம்' - டக்ளஸ் தேவானந்தா...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top