இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து நாளை (திங்கட்கிழமை) அதிபராக பதவி ஏற்க இருக்கிறார்.
அநுராதபுரத்தில் உள்ள பெளத்த விகாரை ஒன்றில் பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற உள்ளது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், கோட்டாபயாவின் சகோதரருமான மஹிந்தாவின் பிறந்தநாள் நாளை என்பதால் இந்த பதவியேற்பு விழா இந்த தினத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் சனிக்கிழமை முடிந்து உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இரவு முழுவதும் தொடர்ந்த வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார்.