728x90 AdSpace


  • Latest News

    குற்றவாளிகளை பொதுமக்கள் முன் அடித்து கொல்ல வேண்டும்.... மக்களவையில் ஜெயா பச்சன் ஆவேசம்...0!


    ஐதராபாத்தில் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் இன்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. இந்த குற்றத்தை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று எம்.பிக்களும் வலியுறுத்தினர்.

    அதில் சமாஜ்வாதி கட்சியின் பெண் எம்.பியும் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன் பேசுகையில், ”நிர்பயா தொடங்கி எத்தனையோ சம்பவங்கள் நடந்து விட்டன. ஆனாலும் பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர் கதையாகி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு என்ன பதில் சொல்லப்போகின்றன. ஐதராபாத்தில் நடந்த சம்பவம் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. குற்றத்தில் ஈடுபட்டவர்களை பொதுமக்கள் முன்னிலையில் அடித்துக் கொல்ல வேண்டும்” என ஆவேசமாக பேசியுள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: குற்றவாளிகளை பொதுமக்கள் முன் அடித்து கொல்ல வேண்டும்.... மக்களவையில் ஜெயா பச்சன் ஆவேசம்...0! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top