728x90 AdSpace


  • Latest News

    தலைவர் 168 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது...!


    ரஜினி நடிப்பில் கடைசியாக பொங்கலுக்கு பேட்ட படம் வெளியானது. அதனை தொடர்ந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ளார். 

    இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மேலும் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

    இந்த படத்தினை தொடர்ந்து இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படம் தற்காலிகமாக தலைவர் 168 என்று அழைக்கப்படும் இப் படத்திற்கு டி,இமான் இசையமைப்பாளரார். மேலும் இந்த படத்தில் மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

    இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. இதன் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: தலைவர் 168 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top