728x90 AdSpace


  • Latest News

    5 ரயில்கள்; 15 பேருந்துகளுக்குத் தீவைப்பு!-குடியுரிமை சட்டப் போராட்டத்தால் ஸ்தம்பித்த மேற்கு வங்கம்...!


    குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்கத்தில் நடந்த கலவரத்தில் ஐந்து ரயில்கள் மற்றும் 15 பேருந்துகளுக்குத் தீவைக்கப்பட்டுள்ளன.

    குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான போராட்டங்கள் நாடு முழுவதும் வலுத்து வருகிறது. குறிப்பாக வடமேற்கு மாநிலத்தில் இந்தப் போராட்டங்கள் உச்சத்தை எட்டியுள்ளன. அரசியல் தலைவர்கள் தொடங்கி பொதுமக்கள் வரை அனைவரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    மேற்கு வங்கப் போராட்டம்
    மேற்கு வங்கப் போராட்டம்
    குடியுரிமை சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமான அஸ்ஸாமில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவையும் மீறி நடந்த மக்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்றது. அதில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குடியுரிமை சட்டப் போராட்டம் ஒருபுறம் தீவிரமடைந்துவரும் நிலையில் அதன் காரணமாக நடந்த துப்பாக்கிச்சூடு விவகாரமும் தற்போது பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
    இந்நிலையில் நேற்று மேற்குவங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டம் கலவரமாக மாறி ஐந்து ரயில்களுக்குத் தீவைக்கப்பட்டுள்ளது. முர்ஷிதாபாத் மாவட்டம் லால்கோலா ரயில் நிலையத்தில் பயணிகளின்றி நிறுத்தப்பட்டிருந்த ஐந்து ரயில்களைப் போராட்டக்காரர்கள் தீக்கிரையாக்கியுள்ளனர். இதே போல ஹவுராவில் உள்ள சங்க ரயில் நிலையத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் டிக்கெட் கவுன்டரில் தீ வைத்துள்ளனர். இதைத் தடுக்க முயன்ற ரயில்வே ஊழியர்களும் தாக்கப்பட்டுள்ளனர்.
    மேற்கு வங்கம் போராட்டம்
    மேற்கு வங்கம் போராட்டம்
    மேற்கு மற்றும் தெற்கு வங்காளத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை முடக்கப்பட்டு அங்கு வந்த மூன்று மாநிலப் பேருந்துகள் உட்பட பதினைந்து பேருந்துகள் கொளுத்தப்பட்டுள்ளன. குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ``மேற்கு வங்கத்தில் நிச்சயம் குடியுரிமை சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது. அதனால் பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும்” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: 5 ரயில்கள்; 15 பேருந்துகளுக்குத் தீவைப்பு!-குடியுரிமை சட்டப் போராட்டத்தால் ஸ்தம்பித்த மேற்கு வங்கம்...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top