728x90 AdSpace


  • Latest News

    இடைவேளையில் 7 மாத கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த வீராங்கனை!


    மிசோரம் மாநிலத்தில் துய்கும் வாலிபால் அணியைச் சேர்ந்தவர் வீராங்கனை லால்வன்ட் லூயாங்கி. அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் இவர், மிசோரமில் மாநில அளவிலான வாலிபால் தொடரில் பங்கேற்று விளையாடினார். இந்த போட்டியில் துய்கும் வாலிபால் அணி வெற்றி பெற்றுள்ளது.

    இந்நிலையில், வாலிபால் போட்டி நடந்து கொண்டிருந்தபோதே, இடைவேளையில் தனது 7 மாத கைக்குழந்தைக்கு லூயாங்கி தாய்ப்பால் புகட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இந்த புகைப்படங்களைப் பார்த்த மிசோரமின் விளையாட்டு மந்திரி ராபர்ட் ரோமாவியா ராய்டே, லூயாங்கியை பாராட்டினார். இதையடுத்து, அவருக்கு ரூ.10,000 வெகுமதி வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: இடைவேளையில் 7 மாத கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த வீராங்கனை! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top