728x90 AdSpace


  • Latest News

    சர்வதேச விருது பெருகிறார் தீபிகா படுகோனே...!


    பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு சர்வதேச கிறிஸ்டல் விருது வழங்கப்பட்டுள்ளது.

    ஜெனிவாவின் உலக பொருளாதார நிறுவனம் என்ற தன்னார்வ அமைப்பு, அடுத்த மாதம் டேவோஸில் நடக்கும் விழாவில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு மன நலம் குறித்த விழிப்புணர்வுக்கான விருது வழங்கவுள்ளது. இந்த விழாவில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான பிரபலங்களும், சர்வதேச அரசியல் தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

    இந்த விருது குறித்து கருத்து தெரிவித்துள்ள தீபிகா, 30 கோடிக்கும் அதிகமானோர் மனநல பாதிப்பால் அவதிப்படுவதாகவும், இதுவே உலக அளவில் உருவாகும் நோய்ச்சுமைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் கூறி உள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: சர்வதேச விருது பெருகிறார் தீபிகா படுகோனே...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top