728x90 AdSpace


  • Latest News

    பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடு கட்டித் தரப்படும்! முதலமைச்சர் உறுதி!!


    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான சுற்றுச் சுவர் இடிந்து அங்கிருந்த வீடுகள் மீது விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சுற்றுச் சுவர் கட்டிய உரிமையாளர் சிவசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் விபத்து நடந்த இடத்துக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, 17 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது என்றார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ரூ.4 லட்சமும், முதலமைச்சர் சிறப்பு நிவாரண நிதியில் இருந்து கூடுதலாக ரூ.6 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

    மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அவர்களின் தகுதிகளுக்கு ஏற்க அரசு வேலை வழங்கப்படும் என்றும், நடூரில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்தார். மேலும், அப்பகுதியில் பாதுகாப்பற்ற முறையிலுள்ள வீடுகளில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அவர் கூறினார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடு கட்டித் தரப்படும்! முதலமைச்சர் உறுதி!! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top