728x90 AdSpace


  • Latest News

    இயர்ஃபோன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்? பாதிப்பை தெரிந்து கொள்ளுங்கள்..!


    அதிக ஒலியில் காதுக்குள் சொருக்கிக் கொள்ளும் வகையிலான இயர்ஃபோன் பயன்படுத்தினால் காது கேட்காமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து காது, மூக்கு, தொண்டை மருத்துவர் ஒருவர் கூறும் போது, ‘காது கேட்காமல் போகும் பிரச்சனை உடனடியாக தெரிவது இல்லை. நமக்கே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வரும். அப்படி யாராவது உங்களை அழைப்பது கேட்கவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. காதுகளில் கேட்கும் ஒலி 60 டெசிபலுக்கு மேல் சென்றால் தான் ஆபத்து’ என கூறியுள்ளார்.

    மூளைக்கு நெருக்கமான அதிர்வலைகளை எழுப்பக்கூடிய இயர்ஃபோன் பயன்பாட்டால் காது கேளாமை பிரச்சனை ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற அதிக சத்தம் காதுகளுக்கு மட்டுமின்றி அவர்களது மனநிலையையும் மாற்றிவிடும். அவர்கள் சமூகத்தில் நடக்கும் விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்ப மாட்டார்கள் என மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: இயர்ஃபோன் அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்? பாதிப்பை தெரிந்து கொள்ளுங்கள்..! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top