728x90 AdSpace


  • Latest News

    `மத பன்மைத்துவம், பாரபட்சம், ஜனநாயகம்' - குடியுரிமை மசோதாவுக்கு அமெரிக்கா, ஐ.நா-வின் ரியாக்ஷன் என்ன?


    மத சுதந்திரத்துக்கான மரியாதை மற்றும் சட்டத்தின் கீழ் சமமான சிகிச்சை ஆகியவை எங்கள் இரு ஜனநாயக நாடுகளின் அடிப்படைக் கொள்கைகள்.

    குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுக்குப் பின் சட்டமாக இயற்றப்பட்டுவிட்டது. இதற்கு எதிர்க்கட்சித் தரப்பிலும் அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. காங்கிரஸ் கட்சி இந்தச் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளது. இதற்கிடையே, சட்டத்திருத்த மசோதா குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் ஐ.நா மன்றமும் தற்போது கருத்து தெரிவித்துள்ளன.


    மசோதா சட்டமாக்கப்பட்டது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க வெள்ளை மாளிகை நிர்வாகம், ``குடியுரிமை திருத்த மசோதா தொடர்பான முன்னேற்றங்களை நாங்கள் நெருக்கமாக பின்பற்றுகிறோம். மத சுதந்திரத்துக்கான மரியாதை மற்றும் சட்டத்தின் கீழ் சமமான சிகிச்சை ஆகியவை எங்கள் இரு ஜனநாயக நாடுகளின் அடிப்படைக் கொள்கைகள். இந்தியாவின் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக மதிப்புக்களுக்கு ஏற்ப தனது மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க அமெரிக்கா இந்தியாவை வலியுறுத்துகிறது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
    குடியுரிமைச் சட்டத் திருத்தம்
    குடியுரிமைச் சட்டத் திருத்தம்
    ஏற்கெனவே திங்களன்று, மக்களவையில் மசோதாவை நிறைவேற்றிய பின்னர், அமெரிக்க வெளியுறவுக் குழு ட்வீட் செய்ததில், ``மத பன்மைத்துவம் இந்தியா மற்றும் அமெரிக்காவின் அஸ்திவாரங்களுக்கு மையமானது. இது எங்கள் முக்கிய மதிப்புகளில் ஒன்றாகும். குடியுரிமைக்கான எந்தவொரு மத சோதனையும் மிக அடிப்படையான ஜனநாயகக் கொள்கையைக் குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது” தெரிவிக்கப்பட்டிருந்தது.
     
    வெள்ளை மாளிகை இப்படித் தெரிவித்திருந்த அதேநேரத்தில் அமெரிக்க காங்கிரஸ்காரர் ஆண்ட்ரே கார்சன், ``இந்தச் சட்டம் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக திறம்பட குறைக்கும் ஒரு முயற்சி" என்று எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், இந்திய வெளியுறவுத் துறையோ, ``அதற்கு சிறிய அளவுகூட இடம் இல்லை" என்று மறுப்பு தெரிவித்தது.
    அமெரிக்காவின் நிலைப்பாடு இப்படியிருக்க, ஐ.நா இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாகப் பேசியுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் ஹைகமிஷனர் ஒருவர், ``இந்தியாவின் குடியுரிமை திருத்த சட்டம் அடிப்படையில் பாரபட்சமானது.

    சமத்துவத்துக்கான உறுதிப்பாட்டைக் குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது" என்று கவலை தெரிவித்தார். ஆனால், ஐ.நா செய்தித்தொடர்பாளரோ, ``இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் மற்றும் மேல் சபைகள் குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளன என்பதை நாங்கள் அறிவோம். மேலும், பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்ட கவலைகள் குறித்தும் நாங்கள் அறிவோம்.
    ஐ.நா.
    ஐ.நா.
    ஐ.நா இந்த விவகாரத்தில் சாத்தியமான விளைவுகளை உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது. மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தில் பொதிந்துள்ள எங்கள் அடிப்படைக் கொள்கைகள் உறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறியுள்ளார்.

     ஐ.நா மற்றும் அமெரிக்க தரப்பில் இருவேறு நிலைப்பாடுகள் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ளன.
    எதிர்ப்பு நிலைப்பாடுகளும் தெரிவிக்கப்பட்டு வரும்நேரம் இந்திய தரப்பிலிருந்து இதற்கு அதிகாரபூர்வ பதில் கொடுக்கப்படவில்லை. வரும் 18-ம் தேதி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அமெரிக்கா செல்லவிருக்கிறார்கள். அப்போது அமெரிக்காவிடம் இருவரும் இந்திய தரப்பின் விளக்கத்தைக் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: `மத பன்மைத்துவம், பாரபட்சம், ஜனநாயகம்' - குடியுரிமை மசோதாவுக்கு அமெரிக்கா, ஐ.நா-வின் ரியாக்ஷன் என்ன? Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top