728x90 AdSpace


  • Latest News

    தமிழகத்தில் அதீத கனமழை... எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!


    சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் பெற்றுள்ள நிலையில் தென்மேற்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

    அதனால் ஏற்கெனவே பெய்து வரும் கனமழையின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்திற்கு அதீத கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதீத கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், கடலூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: தமிழகத்தில் அதீத கனமழை... எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top