728x90 AdSpace


  • Latest News

    `அதிகாரிகளின் கையெழுத்து; அரசு முத்திரை போலி!’ - வேலூர் தாசில்தாரை மிரளவைத்த பெண்...!



    முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்காக மனுக்களில் அரசு அலுவலர்களின் கையெழுத்தை போலியாகப் போட்டு தாசில்தாரையே ஏமாற்ற முயன்ற பெண் சிக்கினார்..

    வேலூர் தாலுகா அலுவலகத்துக்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் வந்தார். அங்கு பணியிலிருந்த சமூக பாதுகாப்புத் திட்டத் தாசில்தார் ஜெகதீஸ்வரனிடம், ‘எனக்கு வேண்டப்பட்ட இரண்டு பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும்’ என்று அதிகாரத் தோரணையில் பேசி மனுக்களைக் கொடுத்தார்.
    வேலூர் தாலுகா அலுவலகம்
    வேலூர் தாலுகா அலுவலகம்
    அதில், தமிழக அரசின் முத்திரையுடன் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரின் கையெழுத்திருந்தது. முத்திரை வித்தியாசமாகத் தெரிந்ததால் தாசில்தார் ஜெகதீஸ்வரன் ஆவணங்களை ஆய்வுக்குட்படுத்தினார்.
    கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளரின் கையெழுத்தை அந்தப் பெண்ணே போட்டுள்ளதும் முத்திரையையும் போலியாக அச்சிட்டுள்ளதையும் தாசில்தார் கண்டறிந்தார். இருப்பினும், இதை முழுமையாக உறுதிப்படுத்துவதற்காகச் சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரை நேரில் வரவழைத்தார்.
    அரசு முத்திரை
    அரசு முத்திரை
    அந்தப் பெண்ணைப் பார்த்த அலுவலர்கள், ``அவர் யாரென்றே தெரியவில்லை; மனுக்களில் உள்ள கையெழுத்து தங்களுடையதில்லை’' என்றனர். அதையடுத்து, வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் அந்தப் பெண்ணை வருவாய் ஆய்வாளர் ஒப்படைத்து புகார் அளித்தார்.
    `இதுபோன்ற மோசடி சம்பவம் எத்தனை நாள்களாக நடைபெற்றுவருகிறது. பின்னணியில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள்’ என்று அந்தப் பெண்ணிடம் போலீஸார் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்திவருகிறார்கள். இதுபற்றி சமூக பாதுகாப்புத் திட்டத் தாசில்தார் ஜெகதீஸ்வரனிடம் பேசினோம்.
    வேலூர் தாலுகா அலுவலகம்
    வேலூர் தாலுகா அலுவலகம்
    ``ஓய்வூதியம் கேட்பவர்கள் முதலில் தாலுகா அலுவலகத்தில் பதிவுசெய்ய வேண்டும். அதன் பிறகே, சம்பந்தப்பட்ட பகுதி வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலருக்கு மனுக்களை அனுப்புவோம். அவர்கள் விசாரணை நடத்தி தகுதியான பயனாளி என்று ஒப்புதல் வழங்க வேண்டும். இதுதான் நடைமுறை. அரசு அலுவலர்களின் கையெழுத்தைத் தாங்களாகவே போடுவது சட்டப்படி குற்றம்'' என்றார்.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: `அதிகாரிகளின் கையெழுத்து; அரசு முத்திரை போலி!’ - வேலூர் தாசில்தாரை மிரளவைத்த பெண்...! Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top