728x90 AdSpace


  • Latest News

    அஜித்தின் வலிமை படத்தில் இணைகிறாரா இலியானா?


    தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்தினை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்காக ஐதரபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலில் சிட்டியில் ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கக் கூடிய நடிகை யார்? என்று பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, நஸ்ரியா உள்ளிட்ட ஒரு சில நடிகைகள் நாயகியாக நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் தற்போது வந்த புதிய தகவலின்படி இலியானா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இவர் ஏற்கெனவே விஜய்யின் நண்பன் படத்தில் நாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: அஜித்தின் வலிமை படத்தில் இணைகிறாரா இலியானா? Rating: 5 Reviewed By: STAR FM
    Scroll to Top